நீதித்துறையை மோடி அரசு அவமதிக்கிறது திருமா.கண்டனம்

சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யும் விதமாக அவசர சட்டத்தை பிறப்பித்து, நீதித்துறையை மோடி அரசு அவமதிக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேசிய தலைநகர் பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத் தான் அதிகாரம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தேசிய தலைநகரில் நிர்வாகத்தை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்கிற விவகாரத்தில் டெல்லி அரசுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் மே 11ம் தேதி ஒருமனதாக தீர்ப்பளித்தது. இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு, தேசிய தலைநகர் பிரதேசத்தின் சட்டமியற்றும் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்ட பகுதிகளைத் தவிர, சேவை நிர்வாகத்தில் நிர்வாகத்தின்மீது சட்டமன்றத்துக்கே உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இது அப்பட்டமாக நீதிமன்றத்தை அவமதிப்பதாகும். இந்த ஜனநாயக படுகொலையை விசிக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். மோடி அரசு இந்த அவசர சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இதனைக் கண்டிக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

Related posts

47வது கோடை விழா இன்றுடன் நிறைவு ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஸ்ரீவரதராஜபெருமாள் கோயிலில் இன்று தேரோட்டம் கோலாகலம்: காஞ்சியில் பக்தர்கள் குவிந்தனர்

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா என்ற சத்யநாராயணன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு