மான் வேட்டை; 8 பேர் கைது

தர்மபுரி: தர்மபுரி வனத்துறையினர் பரிகம் வடக்கு வனக்காவல் சுற்று எல்லைக்குட்பட்ட மலையப்ப நகர் காட்டுவளவு சரகத்தில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புள்ளிமான் ஒன்றை வேட்டையாடி, இறைச்சியை 7 பேருக்கு தொப்பூர் மேல்பூரிக்கல் பகுதியைச் சேர்ந்த துரை (45) என்பவர் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து ரூ,4 லட்சம் அபராதம் விதித்தனர்.

மேலும், துரையிடம் இருந்து மான் இறைச்சி வாங்கிய தொப்பூர் பாக்கியராஜ் (38), மேல்பூரிக்கல் தமிழ்செல்வன் (45), அதேபகுதியைச் சேர்ந்த பெரியசாமி (42), கம்மம்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் (32), ஜருகு சித்தநாதன் (32), அதியமான்கோட்டை வீரசிம்மன் (50), ஜெய்சங்கர் (29) 7 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து 8 பேரை கைது செய்து, 8 பேருக்கும் ரூ,5.55 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Related posts

பலாப்பழக்காரரின் ரகசிய ஆலோசனை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கொடைக்கானல் ஏரிக்குள் பாய்ந்த கார்

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் பலி 2 விசாரணைக்குழு அமைப்பு