அரபிக்கடலில் உருவான ‘பிபோர்ஜோய்’ புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது: இந்திய வானிலை மையம் தகவல்..!

டெல்லி: அரபிக்கடலில் உருவான ‘பிபோர்ஜோய்’ புயல் தீவிர புயலாக வலுப்பெற்றிருப்பதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு 8.30 மணிக்கு புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்தது. இந்த புயலுக்கு ‘பிபோர்ஜோய்’ என பெயரிடப்பட்டுள்ளது. இது இன்று காலை வடக்கு நோக்கி நகர்ந்து தீவிர புயலாக வலுவடைந்தது. மேலும், அடுத்த 24 மணிநேரத்தில் மிக தீவிர புயலாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் மேற்கு-தென்மேற்கில் மையம் கொண்டுள்ள தீவிர புயல் வடக்கில் நகர்ந்து மிக தீவிர புயலாக வலுப்பெற்றது. மிகத் தீவிர புயலாக வலுப்பெற்ற பிபோர்ஜோய், கோவாவுக்கு 860 கி.மீ. மேற்கு தென்மேற்கில் மையம் கொண்டுள்ளது. அரபிக்கடலில் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனே கரைக்கு திரும்ப வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. அரபிக்கடலில் உருவான புயல் தீவிர புயலாக வலுவடைந்ததையொட்டி தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து!

மழை தொடர்வதால் சதுரகிரி செல்ல அனுமதி ரத்து: வனத்துறை அறிவிப்பு

பாஜக தலைமை அலுவலகத்தை இன்று முற்றுகையிடவுள்ளார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்!