சைபர்ஸ்டர்

இந்தியாவின் ஜெஎஸ்டபிள்யூ குழுமம் மற்றும் சீன கார் உற்பத்தி நிறுவனமான சாயிக் மோட்டாரின் எம்ஜி மோட்டார் இந்தியா இணைந்து, சைபர்ஸ்டர் என்ற எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரை அறிமுகம் செய்துள்ளன. இந்த காரில் இரண்டு மோட்டார்கள் மற்றும் 77 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. இதிலுள்ள மோட்டார் அதிகபட்சமாக 535 பிஎச்பி பவரையும், 725 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 100 கிலோ மீட்டர் வேகத்தை 3.2 நொடிகளில் எட்டும். முழுமையாக சார்ஜ் செய்தால் 580 கி.மீ தூரம் வரை செல்லும். இதுதவிர ஒரு மோட்டார் உள்ள வேரியண்ட் உள்ளது. இதில் 64 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 308 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். முழுமையாக சார்ஜ் செய்தால் 520 கி.மீ தூரம் வரை செல்லும். பல்வேறு உயர் தொழில்நுட்ப அம்சங்களும் இந்த காரில் இடம் பெற்றுள்ளன. சர்வதேச சந்தையில் இந்த ஆண்டு மத்தியில் சந்தைப்படுத்தப்பட உள்ளது. ஷோரூம் விலை சுமார் ₹53 லட்சம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

தமிழகத்தில் வெப்பஅலை வீசுவதால் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா

வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் சிசிடிவிக்களை பொருத்த மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவு

முக்கொம்பு கொள்ளிடத்தில் உடைந்த அணைக்கு அருகில் ரூ.7 கோடியில் கான்கிரீட் தளம்: பணிகள் தீவிரம்