கடலூரில் மோசமான வானிலை காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை அறிவுறுத்தல்

கடலூர்: கடலூரில் மோசமான வானிலை காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. கடல் காற்று 55-65கிமீ வேகத்தில் வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்ததால் மீன்வளத்துறை அறிவுறுத்தியிருக்கிறது. இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக் கூடாதென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக வங்கக்கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது.

Related posts

கரூர் தொழிலதிபரிடம் விஜயபாஸ்கர் ₹100 கோடி சொத்து அபகரித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு

மரத்தில் கார் மோதி தாய், மகள் உள்பட 3 பேர் பலி: 3 பேர் படுகாயம்

விக்ரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஆலோசனை