கடலூர் கம்மியம்பேட்டையில் குழாய் உடைந்து வீணாக வெளியேறும் தண்ணீர்-சரி செய்ய கோரிக்கை

கடலூர் : கடலூர் கம்மியம்பேட்டையில் குடிநீர் குழாய் உடைந்து வீணாக தண்ணீர் வெளியேறி வருகிறது. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடலூர் செம்மண்டலம், கோண்டூர், சாவடி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு மாநகராட்சி மூலம் தினந்தோறும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக கேப்பர் மலையில் ராட்சத மோட்டார் மூலம் குடிநீர் எடுக்கப்பட்டு அங்கிருந்து ராட்சத குழாய்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் செம்மண்டலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ராட்சத குழாய் கடலூர் கம்மியம்பேட்டை ஆற்று மேம்பாலத்தின் வழியாக செல்கிறது.

தற்போது கடந்த சில நாட்களாக அந்த ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் பொதுமக்களுக்கு குடிநீரின் தேவை அதிகரித்து வரும் வேளையில் இவ்வாறு குடிநீர் வீணாக ஆற்றில் கலந்து வருவது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குடிநீர் வெளியேறும் குழாயை பார்வையிட்டு, அந்த உடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

மன்னார்குடி அருகே மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!!

இந்திய பிரதமர் என்ற நிலையில் இருந்து தரம் தாழ்ந்து பேசுகிறார் நரேந்திர மோடி: ராகுல்காந்தி கண்டனம்

விருதுநகர் கலசலிங்கம் ஆனந்தம்மாள் தொண்டு நிறுவனங்கள் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டிய கட்டடங்களை அகற்ற ஐகோர்ட் கிளை ஆணை..!!