விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1.84 கோடி தங்கம் பறிமுதல்: 5 பேர் கைது

மீனம்பாக்கம்: இலங்கையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா ஆகிய பயணிகள் விமானங்கள், நேற்று சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தன. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, இலங்கையை சேர்ந்த 4 பெண் பயணிகளிடம் நடத்திய சோதனையில், அவர்களுடைய உள்ளாடைகளுக்குள் தங்க பசைகள் மற்றும் தங்க செயின்கள் இருந்தது. அதன் எடை 1 கிலோ 485 கிராம்.

அதன் சர்வதேச மதிப்பு ரூ.80.42 லட்சம். அதனை பறிமுதல் செய்தனர். இதேபோல், அபுதாபியில் இருந்து எத்தியாட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் சென்னையை சேர்ந்த 35 வயது ஆண் பயணி காலணிக்குள் 518 கிராம் தங்கம் மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.28.04 லட்சம். சுங்க அதிகாரிகள் அதையும் பறிமுதல் செய்து, 5 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related posts

தீப்பெட்டியை எரிக்கும் சீன லைட்டர்கள்

கோடை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை -நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் நீட்டிப்பு

களைகட்ட போகும் கோடை சீசன் ஊட்டியில் மலர் கண்காட்சி மே 10ம் தேதி தொடக்கம்