மின்சாரம் பாய்ந்து 6 பசுக்கள் பலி

ஸ்ரீபெரும்புதூர்: மணிமங்கலத்தில், மின்சாரம் பாய்ந்து 6 பசுக்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மணிமங்கலம் பகுதியில் ஏராளமான பசு மாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவிந்தசாமி, பாலாஜி, மகேந்திரன் ஆகியோரின் பசுமாடுகள் வழக்கம்போல் அதே பகுதியில் நேற்று முன் தினம் மேய்ச்சலுக்கு சென்றுள்ளன.

அப்போது, திடீரென மின் வயர் அறுந்து பசுமாடுகள் மீது விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து அடுத்தடுத்து ஆறு பசுமாடுகள் பரிதாபமாக இறந்தன. இதையடுத்து, அப்பகுதி மக்கள் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர், அதிகாரிகள் மின்சாரத்தை துண்டித்து, உயிரிழந்த பசுமாடுகளை அப்புறப்படுத்தினர். இதுகுறித்து, மணிமங்கலம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related posts

மாதவரம் – சோழிங்கநல்லூர் மெட்ரோ ரயில் வழித்தடத்திற்காக ஆதம்பாக்கத்தில் உயர்மட்ட பாதை பணி தீவிரம்: 2026க்குள் முடிக்க திட்டம்

பாஜ பிரமுகரின் கணவரை வெட்டிய விவகாரம்: 19 ஆண்டுக்கு முன் நடந்த கொலைக்கு பழிதீர்க்க சரமாரியாக வெட்டினோம்: கைதான 7 பேர் பரபரப்பு வாக்குமூலம்

மன்னார்குடி அருகே குளத்தில் குளித்த 4 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு