சென்னை ஐகோர்ட்டில் டைப்பிஸ்ட் கிளார்க்

சென்னை ஐகோர்ட்டின் கீழ் இயங்கும் புதுச்சேரியிலுள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள டைப்பிஸ்ட், கிளார்க் பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்:

1. Typist: 13 இடங்கள். சம்பளம்: ரூ.19,900. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கில டைப்பிங்கில் ஜூனியர் கிரேடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. Junior Clerk: 23 இடங்கள். சம்பளம்: ரூ.19,900. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்று தமிழ் மற்றும் ஆங்கில டைப்பிங்கில் ஜூனியர் கிரேடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. Junior Grade Steno: 9 இடங்கள். சம்பளம்: ரூ.25,500. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் ஜூனியர் கிரேடு, டைப்பிங்கில் சீனியர் கிரேடு முடித்திருக்க வேண்டும்.
4. Senior Grade Steno: 6 இடங்கள். சம்பளம்: ரூ.35,400. தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் ஆங்கில டைப்பிங்கில் சீனியர் கிரேடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கில சுருக்கெழுத்தில் ஆங்கில சுருக்கெழுத்திலும், தமிழ் சுருக்கெழுத்திலும் ஜூனியர் கிரேடு முடித்திருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளுக்கான வயது: 1.1.2024 தேதியின்படி 18 முதல் 32க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி/ மிகவும் பிற்பட்டோர்/முஸ்லிம் ஆகியோருக்கு தலா 2 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும்.

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, திறன் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: ரூ.750/-. இதை The Registrar General, High Court, Chennai என்ற பெயரில் டிடி எடுக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு https://www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.04.2024.

 

Related posts

நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி: செல்லூர் ராஜூ பதிவால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

தமிழ்நாட்டின் மீது பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

குழந்தையின் பாலினத்தை சமூக வலைதளங்களில் அறிவித்த யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை