நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வு

வாரணாசி: உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதியானது இந்து கோயிலுக்கு மேல் கட்டப்பட்டதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம் ஞானவாபி மசூதி வளாகத்தை இந்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்துவதற்கு உத்தரவிட்டது. மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஞானவாபி குழுவினர் தடை உத்தரவு பெற்றனர். மேலும்இது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகும்படி உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் ஞானவாபி மசூதி வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்துவதற்கு மீண்டும் அனுமதி அளித்தது.

இதனை தொடர்ந்து நேற்று காலை மசூதி வளாகத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வை தொடங்கினார்கள். ஆனால் இதனை ஞானாவாபி குழுவினர் புறக்கணித்தனர். வெள்ளி சிறப்பு தொழுகையையொட்டி நேற்று 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஆய்வை தொல்லியல் துறை அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர். இதற்கிடையே தொல்லியல் துறை ஆய்வுக்கு அனுமதி அளித்த அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க கோரி ஞானவாபி மசூதி கமிட்டி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வானது, உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு