கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கூட்டம் நடத்தி அறிக்கை உள்துறை செயலாளர் மூலம் முதலமைச்சருக்கு, ஆட்சியர்கள் அனுப்பி வைக்க வேண்டும். கள்ளச்சாராயம், போதை பொருட்கள் தடுப்பு தொடர்பாக வாரந்தோறும் திங்கட்கிழமை கூட்டம் நடத்த வேண்டும். மெத்தனால் பயன்பாட்டைக் கண்காணிக்க வேண்டும், எல்லைகளில் சிறப்பாக செயல்படும் மதுவிலக்கு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது.

Related posts

சனிக்கிழமை அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுகவை தொடர்ந்து தேமுதிகவும் புறக்கணிப்பதாக அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவிப்பு