கொரோனா பரவலுக்கான அபாயம் குறைவு என்றாலும் சிறிது காலம் முகக்கவசம் அணியலாம் : ஒன்றிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!!

டெல்லி : கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருப்பதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இது அபாய அளவில் இல்லை என்று தெரிவித்துள்ள ஒன்றிய அரசு, எனினும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. தற்போதைய கொரோனா பரவலுக்கு எக்ஸ்பி பி 1.16 திரிபுதான் காரணம் என தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள், இந்த தொற்று பாதித்தவர்களை மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டியது இல்லை என்பதால் அபாயம் குறைவாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

அதே நேரம் சிறிது காலத்திற்காவது மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். இதனிடையே காரைக்காலைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். மூளையில் ஏற்பட்ட கட்டிக்கு சிகிச்சை பெறுவதற்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார். காரைக்கால் பெண் உயிரிழந்தது தொடர்பாக மாநில சுகாதாரத்துறையிடம் விளக்கம் கோரப்பட்டு இருப்பதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Related posts

இந்து மத நம்பிக்கையை மம்தா அரசு புண்படுத்துகிறது: பிரதமர் மோடி பேச்சு

வராக நதியில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை

தலைமை காவலர் பணியிடை நீக்கம்