உங்களின் ஒத்துழைப்பு தேவை: மோடிக்கு சித்தராமையா பதில்

பெங்களூரு: கர்நாடகா முதல்வராக பதவியேற்ற சித்தராமையா, வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பதில் அளித்துள்ளார். கர்நாடக சட்டப் பேரவை தேர்தலில் அபார வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சித்தராமையா நேற்று முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வராக சிவக்குமாரும், அவருடன் 8 எம்எல்ஏக்களுக்கும் அமைச்சர்களாக பதவியேற்றனர். புதியதாக பதவியேற்ற பின்னர் நிருபர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, ‘15வது நிதிக் குழுவின் இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ. 5,495 கோடி சிறப்பு மானியத்தை ஒன்றிய அரசு வழங்கப்படாததால், மாநில அரசுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு பிரதமர் மோடிதான் காரணம். முந்தைய பாஜக அரசு, மாநிலத்திற்கான உரிய தொகையை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று குற்றம்சாட்டினார். புதியதாக முதல்வராக பதவியேற்ற சித்தராமையாவுக்கும், துணை முதல்வராக பதவியேற்ற சிவக்குமாருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், முதல்வர் சித்தராமையா வெளியிட்டுள்ள பதிவில், ‘உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை நனவாக்கும் வகையில், உங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Related posts

என் கனவுத் திட்டமாக தொடங்கி பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு… 24 மணி நேரத்தில் ஆஜராகவில்லை எனில் கைது செய்ய நேரிடும் என போலீஸ் எச்சரிக்கை

அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு அதீத பயம்: பிரதமர் நரேந்திர மோடி சாடல்