குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே பல்சக்கரத்தில் இயங்கும் மலை ரயில் சேவை; 4 புதிய பெட்டிகளின் சோதனை ஓட்டம் வெற்றி..!!

நீலகிரி: குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே பல்சக்கரத்தில் இயங்கும் மலை ரயிலின் புதிய நான்கு பெட்டிகளின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் உதகை குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே ஓடும் மலை ரயில் மேம்பாட்டுக்காக நிலக்கரி, டீசல் என இருபுதிய எஞ்சின்கள் 28 ரயில் பெட்டிகள் கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்டன. இவற்றில் மலைரயில் எஞ்சின்களின் சோதனை ஓட்டம் முடிந்த நிலையில், ரயில் பெட்டிகளின் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.

இதில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை பல்சக்கரத்தில் இயங்கும் மலை ரயிலுக்கான 4 புதிய பெட்டிகளின் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. எடைக்கு ஏற்றவாறு பல் சக்கரத்தில் ரயில் பெட்டிகள் இயங்கும் விதம் குறித்து பொறியாளர்கள் ஆய்வு செய்தனர். விரைவில் இந்த பெட்டிகள் குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க வருகிறது.

Related posts

மலர் கண்காட்சியில் 4 நாளில் ரூ.13 லட்சம் வசூல் கொடைக்கானலில் கனமழை படகுப்போட்டி ஒத்திவைப்பு

கஞ்சா, பணம் எப்படி வந்தது? யூடியூபர் சங்கர் திடுக் வாக்குமூலம்

பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை குற்றவாளிகள் கேரளா ஓட்டமா?