பொது சிவில் சட்டம் ஒற்றுமையை பாதிக்கும்: கேரள சட்டசபையில் கண்டனத் தீர்மானம்

திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில், பொது சிவில் சட்டத்தைக் கண்டித்து நேற்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தை தாக்கல் செய்து முதல்வர் பினராயி விஜயன் கூறியது: ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு கேரள சட்டசபை தனது கவலையையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. ஒருதலைப்பட்சமான மற்றும் அவசரமான இந்த நடவடிக்கை அரசியலமைப்பின் மதச்சார்பற்ற தன்மையை வெற்றிடமாக்குகிறது.

இதுபோன்ற நடவடிக்கைகள் தேசத்தின் ஒற்றுமைக்கு கேடு விளைவிப்பதாகவும் கருதப்படுகிறது. ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் பாதிக்கும் பிரச்னைகளில் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி பொதுவான அணுகுமுறை ஏற்படும் வரை ஒன்றிய அரசு இந்த அவசர நடவடிக்கைகளை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Related posts

மேலூர் அருகே இன்று அதிகாலை பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து மூதாட்டி பலி; 2 பேர் படுகாயம்

கிடப்பில் போடப்பட்ட சிவகங்கை புறவழிச்சாலை பணி தீவிரம்: பொதுமக்கள் மகிழ்ச்சி

பட்டாசு கிடங்கு வெடி விபத்து: முதலமைச்சர் இரங்கல்!