கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்கு தண்டனை விவரம் நாளை அறிவிப்பு..!!

விருதுநகர்: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக 2018ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியிருந்தனர். கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் முன்னாள் பேராசிரியை நிர்மலாதேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்திருந்தது.

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை நீதிமன்றம் விடுதலை செய்தது. இன்று பிற்பகல் 2.30க்கு நிர்மலா தேவியின் தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், நாளை அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. நிர்மலா தேவிக்கான தண்டனை விவரத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் நாளை அறிவிக்கிறார்.

இதனிடையே, வழக்கிற்காக போராடிய அனைவருக்கும் நன்றி என்று அரசு தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். தண்டனை தொடர்பாக நிர்மலா தேவி தரப்பினர் நீதிமன்றத்தில் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் நிர்மலா தேவி சிறைக்கு அனுப்பப்படுவார். நிர்மலா தேவி தரப்பில் தண்டனையை குறைக்க கோரப்படலாம் எனவும் அரசு தரப்பு வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Related posts

மே-15: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

போரெல், ஸ்டப்ஸ் அதிரடி அரை சதம் லக்னோவை வீழ்த்தியது டெல்லி

சிறுமியின் காதலை கண்டித்த தாயின் காதலன் கொலை: வயிற்றில் சொருகிய கத்தியை பிடுங்கி பதிலுக்கு வெட்டியதில் வாலிபர் சீரியஸ்