கோவை வெள்ளியங்கிரி மலை ஏறிய 3 பேர் உயிரிழப்பு..!!

கோவை: வெள்ளியங்கிரி மலை ஏறிய 3 பேர் கடந்த இரண்டு நாட்களில் உயிரிழந்துள்ளனர். வெள்ளியங்கிரி மலை மீது ஏறிய ஐதராபாத்தை சேர்ந்த மருத்துவர் சுப்பாராவ் (57) உயிரிழந்தார். மருத்துவர் சுப்பாராவ் 4-வது மலைக்கு சென்ற போது நெஞ்சுவலியால் மயங்கி விழுந்துள்ளார். வனத்துறை உதவியுடன் சுப்பாராவை மலை அடிவாரம் தூக்கி வந்து பரிசோதனை செய்தபோது உயிரிழந்தது தெரியவந்தது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த தியாகராஜன் (35) முதல் மலை குரங்குபாலம் அருகே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இன்று அதிகாலை 4 மணிக்கு மலை ஏறிய தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் (40) மயங்கி விழுந்து பலியானார். உடலநலம், இருதய பிரச்சனை உள்ளவர்கள் மலை ஏறுவதை தவிர்க்கவும் வனத்துறை அறிவித்துள்ளது.

Related posts

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா!

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!

ஜூன்- 01: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.