கோவை தண்டு மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா: அலகு குத்தி, சக்தி கரகம், அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் ஊர்வலம்!

கோவை: கோவை தண்டு மாரியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். கோவை அவிநாசி சாலையில் உப்பிலி பாளையத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் தொடர்ச்சியாக விரதம் இருந்த பக்தர்கள் சக்தி கரகம், அக்னி சட்டி எடுத்து ஊர்வலம் சென்றனர். கோடியம்மன் கோயிலில் இருந்து ஒப்பணக்கார வீதி, லிங்கப்பச்செட்டி வீதி வழியாக ஊர்வலம் சென்றது.

சத்தியமங்கலம் வடக்கு பேட்டையில் உள்ள தண்டுமாரியம்மன் திருக்கோயில் கம்பம் மற்றும் குண்டம் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. அம்மன் அழைப்பு நிகழ்ச்சிக்கு பிறகு சாமி படைக்கலத்துடன் பவானி ஆற்றுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து அதன்பிறகு கோயிலுக்கு வந்தடைந்தது. அதன் பின்னர் பூசாரி குண்டத்தில் இறங்கியதும் ஏராளமான பொதுமக்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

 

Related posts

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இன்று கோலாகல தொடக்கம்

எம்பி கொலைக்கு சதி திட்டம் தீட்டிய அமெரிக்க தொழிலதிபரை கைது செய்ய நடவடிக்கை: கைதான பெண்ணிடம் விசாரணை

கர்நாடகாவில் கைதி லாக் அப் மரணம்? காவல்நிலையம் சூறை 11 போலீசார் படுகாயம்: டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்