உள்நாட்டு போர் எதிரொலி: சூடானில் இருந்து ஆப்ரேஷன் காவேரி திட்டத்தின் மூலம் சவூதி அரேபியா வந்தடைந்த மேலும் 135 இந்தியர்கள்..!!

சவூதி அரேபியா: உள்நாட்டு போர் நடந்து வரும் சூடானில் இருந்து ஆப்ரேஷன் காவேரி திட்டத்தின் மூலம் 3வது குழுவில் 135 பேர் சவூதி அரேபியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். சூடானில் ஒரு வார காலத்திற்கு மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது. முதற்கட்டமாக ஐஎன்எஸ் சுமேதா கப்பலில் 278 இந்தியர்கள் சூடானில் இருந்து சவூதி அரேபியாவின் ஜெட்டா பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் விமானம் மூலம் 148 பேர் பாதுகாப்பாக ஜெட்டாவுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது 3ம் கட்டமாக மற்றொரு விமானத்தில் புறப்பட்ட 135 பேர் ஜெட்டா நகர் வந்தடைந்ததாக ஒன்றிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். அவர்களை விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இதேபோல் சூடானில் இருந்து லெபனான் நாட்டை சேர்ந்த 12 பேர் சவூதி அரேபியாவின் பேரூட் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். ஜோடான் நாட்டை சேர்ந்த 90 பேர் அந்நாட்டின் அம்மான் பகுதிக்கு ராணுவ விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர்.

பிரிட்டன் அரசு தங்கள் நாட்டை சேர்ந்த 40 பேரை சூடானில் இருந்து முதற்கட்டமாக மீட்டுள்ளது. அவர்கள் ராணுவ விமானத்தின் மூலம் சப்ரைஸ் நாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர். பிரான்ஸ், துருக்கி, எகிப்து என அனைத்து நாடுகளும் சூடானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை பாதுகாப்பாக மீட்டு வரும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

Related posts

திமுக இளைஞர் அணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

லஞ்சம் பெற்றுக்கொண்டு வழக்குப்பதிய குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பரிந்துரை பெண் வழக்கறிஞருக்கு எதிரான போக்சோ வழக்கு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

விளையாட்டு விடுதி மாணவர்கள் சேர்க்கைக்கான மாநில அளவிலான தேர்வுகள் ஒத்திவைப்பு