சினிமா உதவி இயக்குநர் மர்ம சாவு

ஈரோடு: சினிமா உதவி இயக்குநர் சாவில் மர்மம் இருப்பதாக மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த திருவேங்கடம்பாளையத்தை சேர்ந்தவர் தயாளன் (42). இவரது மனைவி பைரோஜா (41). தயாளன் சினிமா உதவி இயக்குநராக பணியாற்றி வந்துள்ளார். மனைவி திருப்பூரில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு தயாளன் வீட்டின் கழிப்பறைக்குள் சென்றார். நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினர் உதவியோடு கழிப்பறை கதவை உடைத்து பார்த்தனர்.

அப்போது தயாளன் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மனைவி பைரோஜா பெருந்துறை போலீசில் அளித்த புகாரில், ‘‘எனது கணவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதால் அவரது உடலை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related posts

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.160 குறைந்து ரூ.53,680க்கு விற்பனை!!

முல்லைப்பெரியாறில் இருந்து தண்ணீர் திறப்பு

அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் பகிரும் அவலம்; எல்லை மீறும் யூடியூபர்களால் அதிகரிக்கும் தற்கொலைகள்: காற்றில் பறக்கிறது தனிமனிதனின் பிரைவசி