பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா


இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்காக கட்டப்பட்ட ஹாங்கோர் வகை நீர்மூழ்கி கப்பலை சீனா அறிமுகம் செய்துள்ளது. பாகிஸ்தான் தனது ராணுவத்தை நவீனமயமாக்கும் வகையில் தனது நட்பு நாடுகளிடம் இருந்து பல்வேறு புதிய ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கடற்படைக்கு வலுசேர்க்கும் வகையில் சீனாவிடம் இருந்து 8 ஹாங்கோர் வகை நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

வுச்சாங் கப்பல்கட்டும் தொழிற்துறை குழுமத்தில் ஹாங்கோர் நீர்மூழ்கி கப்பல் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி வெள்ளியன்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் கடற்படை தலைவர் அட்மிரல் நவீத் அஸ்ரப் கலந்து கொண்டார்.

Related posts

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக உடலுறுப்பு தானம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விவரங்களை உடனுக்குடன் முழுமையாக வழங்க வலியுறுத்தல்: இந்தியா கூட்டணி தலைவர்கள்

கொடைக்கானலில் 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா மே 17-ம் தேதி தொடங்கவுள்ளது: மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்