சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமின்..!!

சென்னை: சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமின் அளிக்கப்பட்டுள்ளது. 2022 ஜூலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரத்தில் முதல்வர் படத்தை அகற்றி பிரதமர் படத்தை ஒட்டியதாக வழக்கு தொடரப்பட்டது. நுங்கம்பாக்கத்தில் போக்குவரத்து போலீசாரிடம் தகராறு செய்த வழக்கில் அமர் பிரசாத்துக்கு நவ.10 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவை அடுத்து அமர் பிரசாத் ரெட்டி மீண்டும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Related posts

நின்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி 15 பேர் பலி: 60 பேர் படுகாயம்; மேற்கு வங்கத்தில் பயங்கரம்

ரேபரேலி எம்பியாக நீடிக்க முடிவு வயநாடு எம்.பி பதவி ராகுல் ராஜினாமா: இடைத் தேர்தலில் பிரியங்கா போட்டி

நான் முதல்வன் திட்டத்தில் லண்டனில் பயிற்சி முடிந்து 25 மாணவர்கள் திரும்பினர்: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து