சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளியின் விலை மீண்டும் உயர்வு!

சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளியின் விலை ரூ.100ஐ எட்டியுள்ளது. சில்லறை விற்பனையில் மீண்டும் தக்காளி விலை ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரத்து அதிகரிப்பால் மற்ற காய்கறிகளின் விலை குறைந்தாலும் தக்காளி விலை மீண்டும் உயர்வு

தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் தக்காளி விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உச்சத்தில் இருந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர். பருவமழை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததால் தமிழ்நாட்டில் தக்காளி மற்றும் பிற காய்கறிகளின் விலை தலைசுற்ற வைத்தது.

இதையடுத்து தற்போது பெய்துவரும் பருவமழை காரணமாக வெளி மாநிலங்களிலிருந்து தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால் மீண்டும் விலை சற்று அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் மீண்டும் தக்காளி ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோயம்பேடு சந்தையில் மற்ற காய்கறிகளை தவிர தக்காளியின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
சின்ன வெங்காயம் ரூ.150க்கும், பட்டாணி ரூ.200க்கும், இஞ்சி ரூ.220க்கும், பூண்டு ரூ.200 க்கும் விற்பனை செய்யப்டுகிறது

Related posts

டெல்லி திகார் சிறையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைந்தார்.

காந்தி நினைவிடம், அனுமன் கோயிலில் பிரார்த்தனை; டெல்லி திகார் சிறையில் கெஜ்ரிவால் சரண்: சுப்ரீம் கோர்ட்டுக்கு நன்றி தெரிவித்தார்

தபால் வாக்குகளை எண்ணி முடித்த பிறகே இவிஎம் வாக்குகளை எண்ண வேண்டும்: இந்தியா கூட்டணி மனு