சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி ஓய்வு பெறுகின்ற காவல் துணை ஆணையாளர் உட்பட 53 காவல் அலுவலர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி ஓய்வு பெறுகின்ற காவல் துணை ஆணையாளர் உட்பட 53 காவல் அலுவலர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். சென்னை, பெருநகர காவலில் பணிபுரிந்து வந்த ஆ.மணிவண்ணன், காவல் துணை ஆணையாளர் (தலைமையிடம்), V.நாகராஜன், சீனியர் நிர்வாக அதிகாரி (அமைச்சுப்பணியாளர்), 4 காவல் ஆய்வாளர்கள், 1 கண்காணிப்பாளர் (அமைச்சுப்பணியாளர்), 40 காவல் உதவி ஆய்வாளர்கள், 1 முதல் நிலைக்காவலர் மற்றும் 5 இதர அலுவலர்கள் என 53 காவல் அலுவலர்கள் 31.03.2024 அன்று பணி ஓய்வு பெறுகின்றனர்.

இன்று (28.03.2024) வேப்பேரி காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பணி நிறைவு விழாவில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., சென்னை பெருநகர காவலில் பணிபுரிந்து ஓய்வு பெறுகின்ற காவல் அலுவலர்களின் சுமார் 25 ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்ததை பாராட்டி, தமிழக காவல்துறைக்கும், சென்னை பெருநகர காவல்துறைக்கும் பெருமை சேர்த்ததை நினைவு கூர்ந்து, சால்வை மற்றும் மாலை அணிவித்து, சான்றிதழ்கள் வழங்கினார்.

காவல் ஆணையாளர், ஓய்வு பெற்ற காவல் குடும்பத்தினரிடம், காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளித்தமைக்காக நன்றி தெரிவித்தார். மேலும், ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டாலோ அல்லது குறைகள் தெரிவிக்க விரும்பினாலோ தன்னை நேரில் சந்தித்து முறையிடலாம் என காவல் ஆணையாளர் அவர்கள் ஓய்வு பெற்ற காவல் அலுவலகர்களிடம் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், காவல் இணை ஆணையாளர் (தலைமையிடம்) A.கயல்விழி, இ.கா.ப., காவல் துணை ஆணையாளர்கள் அதிவீரபாண்டியன் (நிர்வாகம்), ரமேஷ்பாபு, (நவீன கட்டுப்பாட்டறை) மற்றும் ஓய்வு பெற்ற காவல் அலுவலர் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Related posts

லாரி முன் பாய்ந்து சுகாதார ஆய்வாளர் தற்கொலை

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் இதுவரை பிரஜ்வல் மீது புகார் அளிக்கவில்லை: தேசிய மகளிர் ஆணையம் தகவல்

குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வில் நூதன மோசடி; ஆசிரியர் மீது வழக்கு பதிவு: ரூ7 லட்சம், செல்போன் பறிமுதல்