காவிரியில் எந்த காரணத்தை கொண்டும் மேகதாது அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

திருச்சி: காவிரியில் எந்த காரணத்தை கொண்டும் மேகதாது அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார். காவிரி டெல்டாவில் பாசன ஆறுகளில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த பிறகு முதலமைச்சர் பேட்டியளித்தார். இவ்வாண்டு குறுவைத் தொகுப்பு திட்டம் விரைவில் அறிவிக்கப்படும். காவிரி பாசன பகுதிகளில் உள்ள கால்வாய்களை தூர்வார அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. அணை திறப்புக்கு முன்னரே 4,964 கி.மீ. கால்வாய்களை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது என முதல்வர் தெரிவித்தார்.

Related posts

சேலம் – கொச்சி விமானம் திடீர் ரத்து: 50 பயணிகள் அவதி: அதிகாரிகளுடன் வாக்குவாதம்

உத்தரகாண்ட் மாநிலத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு தரையில் விழுந்து வணங்கியபடி பக்தர் புனித பயணம்: திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றார்

அரசியல் காழ்ப்புணர்வால் காந்தி பற்றி மோடி பேச்சு: செல்வப்பெருந்தகை கண்டனம்