பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: காஸ்பர் ரூட் அரையிறுதிக்கு தகுதி

பாரீஸ்: கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பாரீசில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு கால்இறுதியில், 4ம் நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூட், 6ம் நிலை வீரரான டென்மார்க்கின் 20 வயது ஹோல்கர் ரூன் மோதினர். இதில் காஸ்பர் ரூட் 6-1, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். முன்னதாக நடந்த மற்றொரு கால்இறுதியில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், அர்ஜென்டினாவின் தாமஸ் மார்ட்டின் எட்செவரிவை வீழ்த்தினார்.

நாளை அரையிறுதியில் காஸ்பர் ரூட்-ஸ்வெரேவ், செர்பியாவின் ஜோகோவிச்-ஸ்பெயினின் நம்பர் ஒன் கார்லோஸ் அல்காரஸ் மோதுகின்றனர். மகளிர் ஒற்றையரில் இன்று மாலை நடக்கும் அரையிறுதியில், பெலாரசின் அரினா சபலென்கா-செக்குடியரசின் முச்சோவா, போலந்தின் இகா ஸ்வியாடெக்- பிரேசிலின் பீட்ரிஸ் ஹடாட் மியா மோதுகின்றனர்.

Related posts

சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் ஆணை!!

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சி தலைவர் உயிரிழப்பு

மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!