முந்திரி கேக்


தேவையான பொருட்கள்

250 கிராம் முந்திரி
500 கிராம் சர்க்கரை
250 மில்லி நெய்
100 மில்லி தண்ணீர்.

செய்முறை:

முந்திரியை சுடுநீரில் அரை மணி நேரம் ஊறவைத்துக் கழுவி சற்றே கரகரப்பாக நீர் சேர்த்து அரைத்து அடிகனமான பாத்திரத்தில் போட்டு சர்க்கரையைப் பொடித்து இதனுடன் சேர்த்து நன்கு கலந்து விடவும். அதன்பின், அடுப்பில் வைத்து நன்கு கிளறவும். தீயை மீடியமாக வைத்து அடிபிடிக்காதவாறு கிளறவும். பாத்திரத்தின் ஓரங்களில் வெண்மையாக ஒட்டி வரும். அப்போது பாத்திரத்தை இறக்கி வைத்து நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும். நெய்யை முழுமையாக சேர்த்ததும், நன்கு சுருண்டு வரும்போது, நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி சமமாகப் பரப்பி தேவையான ஷேப்பில் கட் செய்தால் முந்திரி கேக் தயார்.

Related posts

டொமேட்டோ ஜூஸ்

பனீர் பராத்தா

பனீர் ரோல்ஸ்