மாட்டிறைச்சியுடன் வந்த பெண்ணை இறக்கிவிட்ட பஸ் டிரைவர், கண்டக்டர் மீது வன்கொடுமை வழக்குப்பதிவு

தா்மபுரி: தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் நவலை கிராமத்தை சேர்ந்த முனுசாமி மனைவி பாஞ்சாலை (59). இவர், கடந்த 20ம் தேதி அரூரில் மாட்டிறைச்சி வாங்கிக் கொண்டு அவரது அண்ணன் பேரன் சிவனுடன் நவலைக்கு அரூர் பஸ் நிலையத்தில் இருந்து ஓசூர் செல்லும் அரசு பஸ்சில் ஏறினர். மாட்டிறைச்சி வைத்திருந்ததை கண்ட கண்டக்டர், டிரைவர் அந்த பெண்ணை நடுவழியில் இறக்கிவிட்டு சென்றனர். அன்று இரவு 9.30 மணிக்கு நவலைக்கு வந்த அந்த பஸ்சை மறித்து அதே பகுதியை சேர்ந்த சிலர் டிரைவர், கண்டக்டரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து கண்டக்டர் ரகு(47) டிரைவர் சசிக்குமார் (50) ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இந்நிலையில் பாஞ்சாலை அளித்த புகாரின்பேரில் கண்டக்டர் ரகு, டிரைவர் சசிக்குமார் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.160 குறைந்து ரூ.53,680க்கு விற்பனை!!

முல்லைப்பெரியாறில் இருந்து தண்ணீர் திறப்பு