புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பஞ்சாபி நடிகர் மரணம்

லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த பிரபல நடிகர் மங்கள் தில்லான் (50), புற்றுநோய் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகர் யஷ்பால் ஷர்மா உள்ளிட்ட பிரபலங்களில், மங்கள் தில்லானின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். சீக்கிய குடும்பத்தில் பிறந்த மங்கள் தில்லான், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் நாடகத்துறை படிப்பில் முதுகலை பட்டப்படிப்பு முடித்தார்.

அதன்பின் 1986ம் ஆண்டு ‘கதா சாகர்’ என்ற தொடர் மூலம் தொலைக்காட்சி உலகில் நுழைந்தார். தொடர்ந்து ‘புனியாத்’, ‘ஜூனூன்’, ‘தி கிரேட்’ உள்ளிட்ட நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் மங்கள் தில்லானின் மறைவு, பஞ்சாப் திரையுலகினர் மற்றுமின்றி ரசிகர்களும் சோகத்தில் உள்ளனர்.

Related posts

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்து ரூ.53.320க்கு விற்பனை

குளித்தலை அருகே மதுபோதையில் தம்பி கத்தியால் குத்தியதில் அண்ணன் பலி!!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்து ரூ.53,328க்கு விற்பனை..!!