புற்றுநோய்க்கு உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முதலாவது மரபணு சிகிச்சை: ஜனாதிபதி தொடங்கி வைத்தார்

மும்பை: புற்றுநோய் சிகிச்சைக்கு சிஏஆர்- டி.செல் என்ற மரபணு சிகிச்சையை மும்பை ஐஐடி மற்றும் டாடா நினைவு புற்றுநோய் மருத்துவ மையம் ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதலாவது மரபணு சிகிச்சைக்கு வெளிநாடுகளில் சிகிச்சைக்காக ஆகும் செலவில் 10ல் ஒரு பங்கு தான் ஆகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள மரபணு சிகிச்சையை ஜனாதிபதி நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில்,‘‘ மரபணு சிகிச்சை தொடங்கப்பட்டிருப்பது பற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் மிக பெரிய திருப்பு முனையாகும். இது முழு மனித சமுதாயத்துக்கும் நம்பிக்கை அளிக்கிறது. இந்த சிகிச்சை சில் மேற்கத்திய நாடுகளில் தான் கிடைக்கிறது. இதற்கான கட்டணம் அதிகம் என்பதால் உலகில் பெரும்பாலான நோயாளிகளுக்கு கிடைப்பது இல்லை. இந்த சிகிச்சை மருத்துவ அறிவியலில் மிக பெரிய சாதனை’’ என்றார்.

Related posts

டெல்லி சரிதா விஹார் காவல் நிலையம் அருகே பஞ்சாப் விரைவு ரயில் பெட்டியில் பயங்கரத் தீ விபத்து..!!

பூவிருந்தவல்லி அருகே உள்ள கண்ணார்பாளையம் ஏரியில் கொட்டப்படும் காலாவதியான ஐஸ்கிரீம் பாக்கெட்டுகளால் சுகாதார சீர்கேடு

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ஜனாதிபதிக்கு ஐகோர்ட் முன்னாள் நீதிபதிகள் கடிதம்