ஓடும் பஸ்சில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி: வாலிபர் அதிரடி கைது

திருவனந்தபுரம்: ஊட்டியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நேற்று மாலை கேரள அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சில் கூடலூரில் இருந்து ஒரு வாலிபர் ஏறினார். அந்த வாலிபர், முன் இருக்கையில் அமர்ந்திருந்த இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இளம்பெண் தூக்கத்தில் இருந்ததால் கவனிக்கவில்லை. பின்னர் அந்த வாலிபர், நைசாக இளம்பெண்ணின் அருகில் அமர்ந்து பலாத்காரம் செய்ய முயன்றார். திடுக்கிட்டு கண்விழித்த பெண் அலறி கூச்சலிட்டார். உடனே சக பயணிகள் எழுந்து கடுமையாக எச்சரித்தனர். இதையடுத்து கண்டக்டரிடம் அந்த பெண் புகார் செய்தார். உடனே வழிக்கடவு போலீஸ் நிலையத்திற்கு பஸ் கொண்டு செல்லப்பட்டது. இளம்பெண் அளித்த புகாரின் பேரில் அந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

இதில் அவர் மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் பகுதியை சேர்ந்த முகம்மது ஹாரிஸ் (42) என தெரியவந்தது. அவர் மீது ஏற்கனவே கோழிக்கோட்டில் ரயில்வே டிக்கெட் பரிசோதகரை தாக்கியது, மோசடி வழக்கு, குடிபோதையில் வாகனம் ஓட்டியது உள்பட ஏராளமான வழக்குகள் உள்ளது தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு அவரை நிலம்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

தேர்தல் முடிவு மோடிக்கு கிடைத்த தார்மீக தோல்வி: சோனியாகாந்தி பேச்சு

ஆந்திராவில் ஆட்சியை பிடித்த நிலையில் சந்திரபாபுநாயுடு மனைவி சொத்து 5 நாளில் ரூ584 கோடி உயர்ந்தது

தேர்தல் ரிசல்ட் தினத்தில் ரூ.30 லட்சம் கோடி இழப்பு; பங்குச்சந்தை முறைகேடு விசாரிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு