நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு மத்திய அரசு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது!!

டெல்லி : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு மத்திய அரசு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. மத்திய அரசு சார்பில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பங்கேற்றுள்ளார். அனைத்துக்கட்சி கூட்டத்தில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, மதிமுக எம்.பி. வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கி அடுத்த மாதம் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது.நாளை மறுநாள் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்