ரூ.25 கோடி லஞ்ச பேரம்; போதை பொருள் தடுப்பு பிரிவு மாஜி அதிகாரி வீட்டில் சிபிஐ ரெய்டு

புதுடெல்லி: கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வைத்திருந்ததாக சொகுசு கப்பலில் இருந்து கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்க தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி வான்கடே ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது.

இதனை தொடர்ந்து சமீர் வான்கடேவுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். மும்பை, டெல்லி, ராஞ்சி மற்றும் கான்பூரில் வான்கடேவுக்கு சொந்தமான 29 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

Related posts

வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?.. மருத்துவர்கள் தரும் புதிய தகவல்

மே மாதத்தின் தொடக்க நாளான நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ920 சரிவு

மேற்கு மண்டல அதிமுகவில் உள்கட்சி பூசல் தீவிரம்; எடப்பாடி-செங்கோட்டையன் மோதல்: மாநில தலைவர் பதவி கொடுத்தால் பாஜவில் சேரவும் முடிவு