பிரேசிலில் சட்டவிரோத தங்க சுரங்கம்; போலீசார் சரமாரி துப்பாக்கி சூடு; 4 பேர் பலி

பிரேசில்: பிரேசிலில் சட்டவிரோத தங்க சுரங்க தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் இறந்தனர். பிரேசில் நாட்டில் ஏராளமான தங்க சுரங்கங்கள் உள்ளன. இதனால், பிரேசில் நாட்டின் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, யானோமாமி பகுதியில் அவசர நிலையை பிறப்பித்தார். அப்போது முதல் அங்கு சட்ட விரோத சுரங்கத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

இந்நிலையில் பிரேசிலின் ரோரைமா மாகாணத்தில் சட்டவிரோதமாக தங்க சுரங்கங்கள் செயல்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சிலர் சுரங்க தொழிலில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் போலீசார் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 4 சுரங்க தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்

காதல் விவகாரத்தில் கத்திக்குத்து முன்னாள் காதலன் பரிதாப பலி: இந்நாள் காதலன் வெறிச்செயல்

மும்பை வடமேற்கு தொகுதியில் EVM-ல் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்