கடன் வாங்கும் விவகாரத்தில் கேரளாவின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது: 5 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

புதுடெல்லி: கடன் வாங்கும் விவகாரத்தில் ஒன்றிய அரசு உச்ச வரம்பு விதித்துள்ளது. இதையடுத்து இந்த நடவடிக்கைக்கு எதிராக கேரளா மாநில அரசு உச்ச நீதிமன்றத்தின் சூட் மனுவை தாக்கல் செய்திருந்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சில தினங்களுக்கு முன்னதாக ஒத்திவைத்து இருந்தனர். இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் கே.வி.விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு நேற்று வழங்கிய தீர்ப்பில்,\\” இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு நிர்ணயித்த நிலையை கேரளா அரசு கூறியது போன்று ரத்து செய்ய முடியாது. எனவே அம்மாநில அரசு கேட்ட இடைக்கால நிவாரண கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. இருப்பினும் வழக்கை உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி பரிந்துரை செய்கிறோம் . அதே நேரத்தில் வேண்டுமென்றால் கடன் வாங்கும் வரம்பை இந்த வருடம் ஒன்றிய அரசு அதிகரித்து வழங்கிவிட்டு, அடுத்த வருடங்களில் அதனை சரி செய்வதற்காக வரம்பினை குறைத்துக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டனர்.

Related posts

முன்பதிவு செய்த பயணிகள் ரயிலில் ஏற முடியாமல் இருக்கைகள் கிடைக்காமல் தவிப்பது இது முதல் முறை அல்ல : திமுக எம்.பி. தயாநிதி மாறன் காட்டம்

கட்டடத்தில் உறங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை திடீரென புகை வந்தது: குவைத்தில் தீ விபத்திலிருந்து தப்பிய தொழிலாளர் தகவல்

வேதாரண்யம் அருகே நடுக்கடலில் இரண்டு நாள் தத்தளித்த இலங்கை மீனவர்கள் இருவர் மீட்பு