டுவிட்டருக்கு சந்தா செலுத்தாததால் ‘புளூ டிக்’கை இழந்த பிரபலங்கள் யார்?: அலியா பட் முதல் யோகி ஆதித்யநாத் வரை

புதுடெல்லி: டுவிட்டருக்கு ‘புளூ டிக்’ சந்தா செலுத்தாததால் நடிகை அலியா பட் தொடங்கி பல பிரபலங்கள் தங்களது ‘புளூ டிக்’ குறியீட்டை இழந்துள்ளனர். உலகளவில் பிரபலமான ‘மைக்ரோ-பிளாக்கிங்’ தளமான டுவிட்டரில் கணக்கு தொடங்கியவர்களில், ‘புளூ டிக்’ கணக்கு பெற்றவர்களுக்கு சில சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதற்காக சம்பந்தப்பட்ட கணக்கு பயனர் கட்டணம் செலுத்த வேண்டும். அதாவது இணையம் வழியாக மாதத்திற்கு 8 டாலர்களும், ஆண்ட்ராய்டு உள்ளிட்ட பயன்பாட்டில் பணம் செலுத்தினால் மாதத்திற்கு 11 டாலர்கள் வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

பெரும்பாலான பிரபலங்கள் ‘புளூ டிக்’ பெறுவதற்காக பணம் செலுத்தி வரும் நிலையில், பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அமிதாப் பச்சன், நடிகைகள் அலியா பட், அனுஷ்கா சர்மா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட பலர் தங்களுடைய ‘புளூ டிக்’ குறியீட்டை இழந்துள்ளனர். இவர்கள் டுவிட்டருக்கு சந்தா தொகையை செலுத்தவில்லை என்பதால், ‘புளூ டிக்’ வாய்ப்பை இழந்துள்ளனர். இந்த ‘புளூ டிக்’ முறையானது பிரபலங்கள், அரசியல்வாதிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், செய்தி நிறுவனங்கள் போன்றவற்றின் உண்மைதன்மையை உறுதி ெசய்யவும், அதற்காக கட்டணமும் வசூலிக்கும் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பழக்கடையில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது

திண்டிவனத்தில் 15 ஆடுகளை திருடிய 3 பேர் கைது

தூத்துக்குடி அருகே 2,460 கிலோ இஞ்சி பறிமுதல்