உபி பல்கலையில் துணைவேந்தரை தாக்கிய பா.ஜ மாணவர் அமைப்பு

கோரக்பூர்: உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் அமைந்துள்ள தீன்தயாள் உபாத்யாயா பல்கலைக்கழகத்தில் பா.ஜ மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர்களில் சிலர், துணைவேந்தர் மற்றும் காவல்துறையினரை கடுமையாகத் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ரந்தீர் மிஸ்ரா கூறுகையில், ‘மாணவ அமைப்பினர் பல்கலைக்கழக துணைவேந்தரைச் சந்திப்பதற்காக சென்றனர். அவர்களை ​​பதிவாளர், போலீசார் தடுத்ததால் அவர்களை தாக்கி விட்டு, பல்கலைக்கழக துணைவேந்தரின் அறைக்குள் நுழைந்து, அவரை நாற்காலியால் தாக்கினர். இதுகுறித்து 8 பேர் கைது செய்யப்பட்டனர்’ என்றார்.

Related posts

மக்களவைத் தேர்தலில் மாஸ் காட்டும் திமுக.. முன்னிலை வகிக்கும் கூட்டணி வேட்பாளர்கள் : ஒரு தொகுதிகளில் கூட முந்தாத அதிமுக, பாஜக!!

உத்திர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு பின்னடைவு

தேனி, வேலூர், தஞ்சை தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் முன்னிலை