பாஜ ஆட்சியில் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை: பிரியங்கா காந்தி சாடல்

புதுடெல்லி: மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் மர்ம நபர்களால் 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவர், அரை நிர்வாண கோலத்தில் ரத்தம் சொட்ட சொட்ட உதவி கேட்டு பல கிமீ தூரம் நடந்து சென்றும்கூட ஒருவர் கூட உதவ முன்வரவில்லை. இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜு கார்கே மற்றும் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் அம்மாநில பாஜ அரசை கடுமையாக சாடியுள்ளனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘உஜ்ஜைன் நகரில் நகரத்தில் ஒரு சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் ஆன்மாவை உலுக்குகிறது. பலவித சித்ரவதைக்கு பிறகு உதவிக்காக வீடு வீடாக அலைந்தார். யாரும் உதவி செய்யவில்லை.

அரை மணி நேரம் கழித்து சாலையில் மயங்கி விழுந்தார், ஆனால் உதவி பெற முடியவில்லை. மத்திய பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு, பெண்களின் பாதுகாப்பு இப்படியா? 20 ஆண்டுகால பாஜவின் தவறான ஆட்சியில் சிறுமிகள், பெண்கள், பழங்குடியினர் மற்றும் தலித்துகள் பாதுகாப்பில்லை. சிறுமிகளுக்கு பாதுகாப்பும், உதவியும் கூட கிடைக்காத பட்சத்தில், ‘லாட்லி பெஹ்னா’ என்ற பெயரில் தேர்தல் அறிவிப்புகளை வெளியிடுவதால் என்ன பயன்’ என்று பாஜ அரசை கடுமையாக சாடியுள்ளார்.

Related posts

மேகதாது அணை பற்றி பேச்சு நடத்த வேண்டும் என்ற ஒன்றிய அமைச்சர் சோமண்ணாவுக்கு ராமதாஸ் கண்டனம்..!!

மேற்குவங்க மாநிலத்தில் சரக்கு ரயில் சிக்னலை மீறி சென்றதால்தான் விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்

பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று சிறந்து விளங்கும் ஆவின் நிறுவனம்: தமிழ்நாடு அரசு