தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பயணித்த ஹெலிகாப்டரில் கார்நாடக தேர்தல் அதிகாரிகள் சோதனை..!!

பெங்களுரு: தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பயணித்த ஹெலிகாப்டரில் கார்நாடக தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். கர்நாடக பாஜக தேர்தல் பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் தேர்தல் பணிக்காக அவர் கர்நாடாவின் உடுப்பி மாவட்டத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தார்.

இந்நிலையில், அவர் பயணம் செய்த ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணம் கொண்டு வரப்பட்டதாக உடுப்பி மாவட்டம் கப்பு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வினய்குமார் சொர்கி குற்றம் சாட்டியுள்ளார். உடுப்பி மாவட்டம் காங்கிரஸ் பவனில் செய்தியாளர்களிடம் பேசியவர்; தமிழ்நாடு பாஜக தலைவரும், கர்நாடக பாஜக பொறுப்பாளருமான அண்ணாமலை உடுப்பிக்கு ஹெலிகாப்டரில் வந்த போது அவர் வந்த ஹெலிகாப்டரில் கட்டு கட்டாக கோடி கணக்கான ரூபாய் பணம் கொண்டு வரப்பட்டது என்றும், கர்நாடக வாக்காளர்களுக்கு அவை விரைவில் பட்டுவாடா செய்யப்படலாம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

அண்ணாமலை பயணித்த ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணம் கொண்டு வரப்பட்டதை குறித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு முறையாக புகார் அனுப்பப்பட்டுள்ளது என்றும் வினய்குமார் சொர்கி தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பயணித்த ஹெலிகாப்டரில் கார்நாடக தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். காங்கிரஸ் வேட்பாளர் வினய்குமார் புகார் கூறியதன் அடைப்படையில் ஹெலிகாப்டரில் சோதனை நடத்தப்பட்டது.

Related posts

தீப்பெட்டியை எரிக்கும் சீன லைட்டர்கள்

கோடை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை -நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் நீட்டிப்பு

களைகட்ட போகும் கோடை சீசன் ஊட்டியில் மலர் கண்காட்சி மே 10ம் தேதி தொடக்கம்