முதல்வர் குறித்து அவதூறு பரப்பிய பாஜ நிர்வாகி கைது

அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமானூர் கிழக்கு ஒன்றிய பாஜ தலைவராக இருப்பவர் வடுகபாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ்(எ)சுரேஷ்குமார்(39). இவர் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள் சிலரை பற்றி தொடர்ந்து அவதூறாக கருத்து பதிவிட்டு வந்துள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் திருமானூர் போலீசார் வழக்கு பதிந்து சுரேஷ்குமாரை கைது செய்தனர்.

Related posts

இந்தியா – இலங்கை பாலம்: ஆய்வு பணி விரைவில் நிறைவு

காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் மீது வழக்குப்பதிவு: திருவல்லிக்கேணி போலீசார் நடவடிக்கை

லாரி ஓட்டுனரிடம் செல்போன் திருடிய 4 பேர் கைது