ரூ. 4 கோடி பறிமுதல் : பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் மீண்டும் விசாரிக்க சிபிசிஐடி முடிவு

சென்னை : தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்தொடர்பாக பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் மீண்டும் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். கடந்த 21 ஆம் தேதி கோவை கணபதி பகுதியில் எஸ்.ஆர்.சேகர் வீட்டிற்கு சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் எஸ்.ஆர்.சேகர் பல கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகவே மீண்டும் எஸ்.ஆர்.சேகரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

Related posts

இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

பீகாரில் கொசாய்மட் என்ற இடத்தில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து