இந்த பின்னடவை எதிர்பார்க்கவில்லை; சட்டமன்ற தேர்தல் முடிவை பா.ஜ.க. ஏற்றுக் கொள்கிறது: பசவராஜ் பொம்மை பரபரப்பு பேட்டி

பெங்களூரு: கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் தோல்வியை பசவராஜ் பொம்மை ஒப்புக்கொண்டார். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. ஆரம்மப்பத்தில் இருந்தே காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. இப்போது வெளியாகியிருக்கும் தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. பெரும்பான்மைக்கு தேவையான 131 இடங்களுக்கும் அதிகமாக இப்போது வரை முன்னிலையில் இருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி காங்கிரஸ் கட்சி 125 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்ட நிலையில், நாளை ஆட்சி அமைக்க உரிமை கோர திட்டமிட்டுள்ளது.

தேர்தல் தோல்வியால் கர்நாடகத்தில் பாஜக ஆட்சியை பறிகொடுக்கிறது. கர்நாடகத்திலும் பாஜக ஆட்சியை இழப்பதால் தென்னிந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பசவராஜ் பொம்மை; சட்டமன்ற தேர்தல் முடிவை பா.ஜ.க. ஏற்றுக் கொள்கிறது. தேர்தலில் ஏற்பட்ட இந்த பின்னடைவை எதிர்பார்க்கவில்லை. வெற்றிக்கான இடங்களை எங்களால் பெற முடியவில்லை; முடிவுகள் முழுவதுமாக வந்ததும், எங்கே நாங்கள் வாய்ப்பை தவறவிட்டோம் என அலசுவோம். எங்கள் தவறுகளை திருத்திக் கொண்டு, மீண்டும் கட்சியை பலப்படுத்துவோம். வரும் நாடாளுமன்ற தேர்தலை முழு பலத்துடன் எதிர்கொள்வோம் இவ்வாறு கூறினார்.

Related posts

சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் மோதல்: நெருக்கடியில் ருதுராஜ் & கோ

இத்தாலி ஓபன் 4வது சுற்றில் இகா

சில்லி பாயின்ட்…