பா.ஜ.க. நிர்வாகி அகோரம் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..!!

சென்னை: பா.ஜ.க. நிர்வாகி அகோரம் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்துக்கு மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அகோரம் கைதானார். அகோரத்துக்கு எதிராக 47 வழக்குகள் நிலுவையில் உள்ளது என காவல்துறை வாதம் வைத்தது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேர் தலைமறைவாக உள்ளதால் அகோரத்துக்கு ஜாமின் தரக்கூடாது என போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காவல்துறை எதிர்ப்பை அடுத்து மயிலாடுதுறை பா.ஜ.க. மாவட்ட தலைவர் அகோரம் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Related posts

திருவள்ளூர் அடுத்த காக்களூரில் பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு 4ஆக உயர்வு!!

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.160 குறைந்து ரூ.53,680க்கு விற்பனை!!