ஜிஎஸ்டி தீர்ப்பாய தலைவர்கள் வயதை உயர்த்தும் மசோதா நிறைவேறியது

புதுடெல்லி: ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் வயது வரம்பை உயர்த்தும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘பல்வேறு உயர் நீதிமன்றங்கள் அல்லது உச்ச நீதிமன்றத்தில் ஜிஎஸ்டி கோரிக்கைகளுக்கு எதிராக வழக்குத் தொடரும் வரி செலுத்துவோர் தங்கள் வழக்குகளைத் திரும்பப் பெறவும், அமர்வுகள் செயல்படத் தொடங்கியவுடன் ஜிஎஸ்டிஏடியை அணுகலாம்’ என்றார். இதை தொடர்ந்து ஜிஎஸ்டி இரண்டாவது திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா நிறைவேறியது முதல் ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களின் (ஜிஎஸ்டிஏடி) தலைவர் வயது 70ஆகவும், உறுப்பினர்களின் வயதை 67ஆகவும் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்பு தலைவர் வயது 67 மற்றும் உறுப்பினர்கள் 65 வயது வரை நியமிக்க அனுமதி இருந்தது. மறைமுக வரிகள் தொடர்பான வழக்குகளில் 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள வழக்கறிஞர், ஜிஎஸ்டிஏடியின் நீதித்துறை உறுப்பினராக நியமிக்கத் தகுதியுடையவர்.
சுங்கம், கலால் வரி பரிந்துரைகள் உடனடி அமல்: ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சுங்க மற்றும் கலால் வரிகளில் மாற்றங்களை உடனடியாக அமல்படுத்தும் மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
தற்காலிக வரிகள் சேகரிப்பு மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றிப்பட்டது.

Related posts

மகாராஷ்டிராவில் சாதித்தது மகா விகாஸ் அகாடி கூட்டணி

10 ஆண்டு ஆட்சியில் இருந்தும் ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியாமல் போன பிஆர்எஸ் கட்சி

மோடியின் ஆட்சிக்கு எதிரான மக்கள் தீர்ப்பு: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி