பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது

புதுடெல்லி: பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூர். பீகார் மாநில 11வது முதல்வராக 1970 டிசம்பர் 22 முதல் 1971 ஜூன் 2ம் தேதி வரை பதவி வகித்தார். மேலும் 1977 டிசம்பர் முதல் 1979 ஏப்ரல் வரை முதல்வர் பதவி வகித்தார். மக்கள் நாயகன்(ஜனநாயக்) என்று அழைக்கப்பட்டு வந்த அவர் சோசலிஸ்ட் மற்றும் ஜனதா கட்சியில் பணியாற்றினார். காங்கிரஸ் சாராத கட்சியில் இருந்து முதன்முதலில் பீகார் முதல்வர் பதவி வகித்தவர் என்ற பெயரை பெற்றவர். அவர் 1988ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி தனது 64வது வயதில் பாட்னாவில் காலமானார். அவரை போற்றும் வகையில் ஒன்றிய அரசு 1991ம் ஆண்டு தபால் தலை வெளியிட்டு பெருமைப்படுத்தியது. இந்நிலையில் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதாக ஜனாதிபதி மாளிகை நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்