தமிழ்க்கவிதை மரபில் புதுப்பாதை அமைத்துப் புரட்சி நிகழ்த்திய மகாகவி பாரதியார் : முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் அமித்ஷா வாழ்த்து!!

சென்னை : தமிழ்க்கவிதை மரபில் புதுப்பாதை அமைத்துப் புரட்சி நிகழ்த்திய மகாகவி பாரதியார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மகாகவி பாரதியாரின் 142-வது பிறந்த நாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,””வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே! வான மளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே!” எனத் தமிழை வாழ்த்தி, தமிழ்க்கவிதை மரபில் புதுப்பாதை அமைத்துப் புரட்சி நிகழ்த்திய மகாகவி பாரதியாரின் பிறந்தநாளில் அவர் தமிழுக்கும் இந்திய விடுதலைப் போராட்டத்துக்கும் ஆற்றிய பெரும்பணிகளைப் போற்றி வணங்குவோம்! வாழிய முண்டாசுக் கவிஞனின் புகழ் வையம் உள்ளவரை!,” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று எக்ஸ் தள பக்கத்தில் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில், “சுப்பிரமணிய பாரதி அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.ஒரு கவிஞரான மகாகவியின் படைப்புகள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையே உலுக்கியது. தேசபக்தி அலையை மக்களிடம் தட்டி எழுப்பியவர். பாரதி அவர்கள் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பொருட்படுத்தாமல் தொடர்ந்து எழுதியவர். அவரது வாழ்க்கை சரித்திரமும் அவரது செயல்களும் என்றென்றும் நம்மை ஊக்குவிக்கும் என்று கூறியுள்ளார்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவிப்பு

நீட் தேர்வு தேவையா என்பது பற்றி முன்னுரிமை அளித்து நாடாளுமன்றக் நிலைக்குழு விவாதிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

நபிகள் நாயகத்தின் அறிவுரைகளைப் பின்பற்றி வாழ்கின்ற இசுலாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்