பெங்களூருவில் தேர்தல் பிரசாரத்தின்போது விபத்து ஒன்றிய அமைச்சர் கார் கதவு மோதி முதியவர் பலி

பெங்களூரு: பெங்களூரு, வடக்கு தொகுதி பாஜ வேட்பாளராக ஒன்றிய இணை அமைச்சர் ஷோபா கராந்தலஜே போட்டியிடுகிறார். இதையொட்டி கே.ஆர்புரத்தில் பிரசாரத்தில் ஷோபா பங்கேற்று வருகிறார். இந்நிலையில், கே.ஆர்.புரம் பகுதியில் நேற்று கணபதி கோவில் அருகே ஷோபா பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அவரின் பிரசார கார் திடீரென்று நின்றுள்ளது.

அப்போது கார் டிரைவர் கதவை திறந்த போது பின் பகுதியில் இருந்து வந்த பைக் மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் பைக்கில் வந்த 60 வயதான பிரகாஷ் கீழே விழுந்துள்ளார். அப்போது அதே வழித்தடத்தில் அதிவேகமாக சென்ற தனியார் பஸ்சின் சக்கரம் பிரகாஷ் மீது ஏறியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் படுகாயம் அடைந்த பிரகாஷ் உயிரிழந்தார்.

Related posts

சென்னை நந்தனம் அரசு ஆண்கள் கலைக்கல்லூரியை இருபாலர் பயிலும் கல்லூரியாக மாற்றி உயர் கல்வித்துறை உத்தரவு

எம்எல்ஏவாக பதவியேற்ற அடுத்த நாளே கனத்த இதயத்துடன் ராஜினாமா செய்கிறேன்: சிக்கிம் முதல்வரின் மனைவி பரபரப்பு பேட்டி

24ம் தேதி நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில் எதிர்கட்சி தலைவர், துணை சபாநாயகர் பதவி யாருக்கு?: ‘இந்தியா’ கூட்டணி பலத்துடன் இருப்பதால் தேர்தல் நிச்சயம்