பெங்களூரு குண்டுவெடிப்பு விவகாரம்: முக்கிய குற்றவாளி சபீர் என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து விசாரணை..!!

பெங்களூரு: பெங்களூருவில் ராமேஸ்வரம் கபே உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக குற்றவாளி சிக்கி இருக்கிறார். பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் மார்ச் 1ம் தேதி மதியம் ஒரு மணியளவில் 2 குண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து பெங்களூரு போலீஸார் 8 தனிப்படைகளை அமைத்து விசாரித்து வந்தனர். சந்தேகிக்கப்படும் குற்றவாளி வாடிக்கையாளர் போல ஓட்டலுக்குள் நுழைந்த‌து கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

அவர் கருப்பு பேன்ட், சட்டை, வெள்ளை தொப்பி, கருப்பு கண்ணாடி, முகக் கவசம் அணிந்துள்ளார். இந்த வழக்கு நேற்று முன்தினம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிசிடிவி காட்சி அடிப்படையில் குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டு துப்பு கொடுப்பவருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ அறிவித்தது.

இந்நிலையில், பெங்களூருவில் ராமேஸ்வரம் கபே உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக குற்றவாளி சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பெல்லாரியில் வைத்து சபீர் என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பிடிபட்ட சபீரிடம் ரகசிய இடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

நீலகிரி கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி மீட்பு

சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி

நெல்லை-எழும்பூர் இடையே சிறப்பு வாராந்திர ரயில்களின் சேவை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே