வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. நாளை நள்ளிரவு தீவிர புயலாக வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்குவங்க கடற்கரையில் சாகர்தீவு அருகே கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் நேரத்தில் மணிக்கு 120 கி.மீ. வரையும், இடையிடையே 135 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலைகொண்டு இருந்தது. அது நேற்று வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்றது. இதற்கு ‘ரீமால்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

தற்போது இந்த புயல் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வருகிறது. ரீமால் புயலானது வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பின்னர், நாளைகாலை வடக்கு நோக்கி செல்லும் ரீமால் புயல் தீவிர புயலாக வலுவடையும். இந்த தீவிர புயல் வங்காளதேசம் மற்றும் சாகர் தீவு மற்றும் கேபுபாரா இடையே கரையைக் கடக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கரையை கடக்கும் போது மணிக்கு 110-120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related posts

மன்னார்குடி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு

மேற்கு வங்கத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி 4 பேர் உயிரிழப்பு: சம்பவ இடத்திற்கு விரைகிறார் முதல்வர் மம்தா பானர்ஜி

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.53,520க்கு விற்பனை