வங்கி லாக்கரில் வைத்திருந்த ரூ.18 லட்சம் பணத்தை சாப்பிட்ட கரையான்: உ.பியில் வங்கியில் அவலம்

மொரதாபாத்: உத்தரபிரதேசம் மொரதாபாத்தை சேர்ந்தவர் அல்கா பதக். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர் தன் மகளின் திருமண செலவுகளுக்காக 2022ம் ஆண்டு முதல் சேமித்த தொகையையும், நகைகளையும் ராமவிஹார் கங்கா நகர் பகுதியில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா கிளை வங்கி லாக்கரில் வைத்துள்ளார். அண்மையில் வருடாந்திர லாக்கர் ஒப்பந்தம் புதுப்பித்தல் மற்றும் கேஒய்சி சரி பார்ப்புக்கான வங்கி மேலாளரிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து வங்கிக்கு சென்று நடைமுறைகளை முடித்த அல்கா பதக், இருப்புகளை சரி பார்க்க தன் வங்கி லாக்கரை திறந்தபோது அதிர்ச்சியில் மயங்கினார். அல்கா பதக் லாக்கரில் வைத்திருந்த ரூ.18 லட்சம் ரொக்கப் பணத்தையும் கரையான் அரித்து சாப்பிட்டு விட்டிருந்ததே அவரின் மயக்கத்துக்கு காரணம். உடனே இதுகுறித்து வங்கி மேலாளரிடம் அல்கா புகாரளித்தார். இதுகுறித்து வங்கி விசாரணை நடத்தி வருகிறது.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்